2023 ஆம் ஆண்டை கடந்து எப்படியோ 2024 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த 2024 எப்படியிருக்குமோ என்று ஒரு பக்கம் கலக்கத்தில் இருப்போம்.மற்றொரு பக்கம் கடந்து சென்ற 2023 ஆண்டைப் பற்றி ஒரு பகீர் செய்தி வலம் வருகிறது.
2023 ஆம் ஆண்டினை உலகின் மிக “வெப்பமான ஆண்டு” என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி அதிகப்படியான வெப்பம் பதிவாகி உள்ளதாகவும், இது கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் பதிவாகாத அளவு என கோப்பர் நிகஸ் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் அளவிடப்பட்ட அளவிலிருந்து வந்த வெப்பநிலையில் ஒரு மைல் கல் எனக் கருதப்படுகிறது. இது உலகின் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
1850- 1900 இருந்ததை விட தொழில் துறையின் வளர்ச்சிக்குப் பின் 2023- ல் இந்த பூமியின் வெப்பம் 1.48 டிகிரி செல்சியஸ் அதிகமாகி பூமியின் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
அதற்கு காரணம் புதை படிவ, எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல்,எரிவாயு போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கர்ப்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் அளவிற்கு அதிகமாக கலப்பதால் இந்த வெப்பநிலை அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைவதை நிறுத்த, 1.5° செல்சியஸ் தாண்டுவதை தடுக்க, அதன் விளைவுகளை குறைக்க 2015 ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. இதுவரை அதே அளவில் சராசரியாக இருந்து வந்த வெப்பநிலை இந்த ஆண்டு மாறியுள்ளது.இதனால் வெப்பம் அதிகரித்துள்ளது. இது ஒரு பயங்கரமான முன்னுதாரணம் ஆகும்
நியூ கேஸில் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றத்திற்கான பேராசிரியர் ஹேலிக் ஃபோலர் இதை சாதனை படைத்த ஆண்டு என்றும் இந்த வெப்ப உமிழ்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் அடிக்கோடிட்டு காட்டுகிறார்.
வெப்பத்திலிருந்து நாம் நம்மைக் காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என முன்னெடுப்புகளை எடுக்கிறோமோ அதே முன்னெடுப்புகளை நாட்டைக் காப்பதிலும் இருந்தால் நம் அனைவருக்கும் நலம்.