டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடைகளின் ஏற்றுமதி 2023- 2024 ஆம் ஆண்டிலிருந்து 2022- 2023 காலகட்டத்தோடு ஒப்பிடும்போது 35.5 பில்லியன் டாலரில் இருந்து 34.4 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது.கிட்டத்தட்ட 3.24%

ஆனால் 2021-22 ஆம் ஆண்டில், ஜவுளி மற்றும் ஆடைகளின் ஏற்றுமதி 41 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது.

 

textile mills 2

 

தொடர்ந்து சரிவுப் பாதையில் ஜவுளி ஏற்றுமதி செல்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா ,

2023-24 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்த இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

ஜவுளிப் பொருட்களுக்கான ஏற்றுமதி 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் என்பதை லட்சிய இலக்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here