இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.மேலும் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தங்கலான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி படத்தில் நடிகர் விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு ஆகியவை படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.
அதேபோல் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்க்கு ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் தங்கலான் திரைப்படம் வரும் 26ம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தங்கலாம் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .அதில் உலகம் முழுவதும் தங்கலான் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.