தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு “வாக்காளரின் வலிமை” என்ற நூலினை தமிழக பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார். இந்த நூலை
24 மணி நேரத்தில் தயாரித்து வெளியிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பொய் பிரச்சாரத்திற்கு பதிலளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) திருத்த பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு “வாக்காளரின் வலிமை” என்ற நூலினை 24 மணி நேரத்தில் தயாரித்து வெளியிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பொய் பிரச்சாரத்திற்கு பதிலளித்துள்ளேன்.
” சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் “வாக்குரிமை பறிக்கப்பட இருக்கிறது” என்று பொய் கூறி வருகின்றனர். இது ‘சேர்ப்புக்கான இயக்கம்’ (Inclusion) தானே தவிர, ‘நீக்குவதற்கான இயக்கம்’ (Exclusion) அல்ல. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சீர்திருத்த இயக்கம் நடைபெறுகிறது. இறந்தவர்கள், வேறு ஊருக்குச் சென்றவர்கள், இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோரை நீக்குவதோடு, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தவறாமல் சேர்க்கப்படுவார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. பொய்யான வாக்காளர்களைப் பதிவு செய்து, ஒரு பூத்துக்கு 200 பேரை அதிகமாகச் சேர்க்கும் தீவிர வாக்காளர் இயக்கத்தை நடத்தியுள்ளது. எனவே, நேர்மையான இந்தத் தீவிர வாக்காளர் பதிவு இயக்கத்துக்கு (SIR) அவர்கள் அஞ்சுகிறார்கள்.
முதலமைச்சர், “பா.ஜ.க.வுக்குப் பயந்து சில கட்சிகள் வரவில்லை” என்று கூறுகிறார். உண்மையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட 41 கட்சிகளும் முதலமைச்சருக்கு பயந்துதான் வந்தார்கள், பா.ஜ.க.வுக்குப் பயந்து அல்ல. இந்தத் தேர்தல் ஒரு சாதாரணத் தேர்தல் அல்ல, நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில், சென்னை கோட்டையில் இரட்டை இலையோடு தாமரை மலரும். தி.மு.க.வினர் மறைந்தவர்களைக்கூட வாக்காளர் பட்டியலில் வைத்து தேர்தலுக்கு வரவைப்பார்கள் “இனி தமிழன் ஏமாற்றப்படக் கூடாது”. ” தற்போது நடைபெறும் வாக்காளர் சீர்திருத்தம் என்பது 21 ஆண்டுகளுக்கு கழித்து வரவுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் இருக்கும். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அது நடக்காத காரணத்தால் நிச்சயமாக இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால், ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று நாங்கள் கேள்வியை முன் வைக்கிறோம்.
இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட போகிறது, இரட்டை வாக்காளர்கள் நீக்கப்பட போகிறார்கள். இதற்கு ஏன் பதற்றம்?. சிறுபான்மையினர் வாக்குகளை நீக்குவதாக குற்றம் சாட்டுகிறார்கள் ஆனால் குஜராத், கோவா போன்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்களின் துணையோடு தான் பாஜக ஆட்சி அமைத்து பிரதமர் அந்த பதவியில் இருக்கிறார்.” நேற்று நடைபெற்ற எஸ்ஐஆர்-க்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டுமென்றும், இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை 2026 க்கு பிறகு நடத்த வேண்டும் என்கிறார்கள். தேர்தல் வரும் முன்பு தான் இது போன்ற திருத்தங்களை செய்ய வேண்டும்”
வாக்களிக்க தகுதியானவர்கள் வாக்களிக்க போகிறார்கள். வாக்களிக்க தகுதியற்றவர் பெயர்கள் நீக்கப்பட போகிறது. தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கினால் திமுக சும்மா இருக்குமா? மேலும் தமிழ்நாட்டில் ஒரு நல்லது நடக்கும் போது அதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கிறது.
” ஆகவே, தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR) திருத்த பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 