கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தவெக கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் எவ்வித அரசியல் செயல்பாடுகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தவெக வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று ( நவம்பர் 5) நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்குழுவில் முதலாவதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.
இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக தவெக தலைவர் விஜயை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் 2026 தேர்தல் தொடர்பான கூட்டணி முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடந்து பொதுக்குழுக்கூட்டத்தின் இறுதியில் பேசிய தவெக தலைவர் விஜய்,
“நமது குடும்ப உறவுகளை இழந்ததால், சொல்ல முடியாத வழியிலும் வேதனையிலும் இதனை நாட்கள் இருந்தோம். நாம் அமைதி காத்த நேரத்தில் நம்மை பற்றி அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2026-ல் திமுக, தவெக இடையே தான் போட்டி என பேசியுள்ளார்.


