தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,
” தமிழக வெற்றி கழகத்தின் அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதிய நிர்வாக குழு நியமிக்கப்படுகிறது.
எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்த நிர்வாக குழுவிற்கு கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என தெரிவித்துள்ளார்.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவில், தவெக -வின் பொதுச்செயலாளர். ஆனந்தன், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்.ஆதவ் அர்ஜுனா, துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல்குமார், கொள்கை பரப்பு பொதுச்செயலாளர். அருண்ராஜ், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரின் 28 நபர்களின் பெயர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளன.

