தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

saravanan
7404 Views
1 Min Read
Highlights
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை பெய்யும்.
  • இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.
  • சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், கோவை, சேலம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply