பொங்கல் பண்டிகை: அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

Priya
26 Views
1 Min Read

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த 12.01.2026 முதல் வரும் 18.01.2026 வரை சிறப்புத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விதிமீறலில் ஈடுபட்ட Bus உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய 45 சிறப்புக்குழுக்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. 13.01.2026 வரை நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 3,337 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 547 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்த 30 Bus வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிக்கும் Bus நிறுவனங்கள் குறித்துப் புகார்கள் எழுந்த நிலையில், இந்தத் தணிக்கை வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி சோதனையின் போது, விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்பட்ட மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்த Bus உரிமையாளர்களிடமிருந்து இணக்கக் கட்டணமாக ரூ.2,46,000 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக வரி செலுத்தாத பேருந்துகளிடமிருந்து ரூ.41,77,362 வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் எந்தவிதச் சிரமமும் இன்றிப் பயணம் செய்வதை உறுதி செய்ய, தொடர்ந்து அனைத்து சோதனைச் சாவடிகளிலும் Bus தணிக்கை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply