‘காவல் கரங்கள்’ மூலம் மீட்கப்பட்ட 75 வயது மூதாட்டி குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைப்பு

Priya
879 Views
1 Min Read

சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் அருகே ஆதர​வின்றி நின்​றிருந்த 75 வயது மூதாட்​டியை, சென்னை காவல் துறை​யின் ‘காவல் கரங்​கள்’ உதவி மையத்​தினர் மீட்​டு, அவரது குடும்​பத்​தினருடன் சேர்த்து வைத்​தனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கடம்​பத்​தூரைச் சேர்ந்த குப்​பம்​மாள் (75), கடந்த செப். 30-ம் தேதி வீட்டை விட்டு சென்​றவர் மீண்​டும் திரும்​ப​வில்​லை. இதுகுறித்து அவரது குடும்​பத்​தினர் கடம்​பத்​தூர் போலீ​ஸில் புகார் அளித்​திருந்​தனர்.

இதற்​கிடையே, சென்ட்​ரல் ரயில்வே காவல் நிலைய எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​யில் ஆதர​வின்றி நின்​றிருந்த குப்​பம்​மாளை, ‘காவல் கரங்​கள்’ குழு​வினர் மீட்டு காப்​பகத்​தில் தங்க வைத்​தனர்.

பின்​னர் அவரது புகைப்​படத்தை காவல் நிலை​யங்​களுக்கு அனுப்பி விசா​ரித்​த​தில், அவர் காணா​மல் போனது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரது மகள் ராஜேஸ்​வரி மற்​றும் உறவினர்​களை வரவழைத்​து, வடசென்னை காவல் கூடு​தல் ஆணை​யர் கபில் குமார் சி.சரத்​கர் முன்​னிலை​யில் நேற்று முன்​தினம் குப்​பம்​மாள் குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டார். தாயை மீட்​டுக் கொடுத்த போலீ​ஸாருக்கு குடும்​பத்​தினர் நன்றி தெரி​வித்​தனர்.

10,789 பேர் மீட்பு

சென்னை பெருநகர காவல்​துறை​யின் ‘காவல் கரங்​கள்’ திட்​டம் தொடங்​கிய 5 ஆண்​டு​களில் இது​வரை 10,789 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களில் 4,350 பேர் குடும்​பத்​தினருடன் சேர்த்து வைக்​கப்​பட்​டுள்​ளனர். ஆதர​வற்​றோர் குறித்து 24 மணி நேர​மும் செயல்​படும் 94447 17100 என்ற உதவி எண்​ணில் பொது​மக்​கள் தொடர்பு கொள்​ளலாம்​ என்​று காவல்​துறை தெரி​வித்​துள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply