தமிழ்நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் நோக்கில் ராணிப்பேட்டையில் கர்மவீரர் காமராஜர் அவர்கள் மறைந்திருந்து செயலாற்றிய வீட்டை சீரமைத்துள்ளது தமிழ்நாடு அரசு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதை இன்று திறந்து வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” 1942இல் மும்பையில் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ மாநாட்டில் கலந்து கொண்டு அங்கேயிருந்து தமிழ்நாடு திரும்பிய கர்ம வீரர் காமராஜர் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் ராணிப்பேட்டையில் தங்கி இருந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் நோக்கில் ராணிப்பேட்டையில் கர்மவீரர் காமராஜர் அவர்கள் மறைந்திருந்து செயலாற்றிய வீட்டை சீரமைத்து, நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், நம் திராவிட மாடல் அரசு அதனை சீரமைத்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க அந்த இல்லத்தை இன்று நாம் திறந்து வைத்தோம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தியாகத்தை என்றென்றும் போற்றுவோம்!” என தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 