வடகிழக்கு பருவமழை காலத்தில் திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கும் ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தது தான், எப்பொழுதுமே “மக்களிடம் செல், மக்களிடம் பழகு,மக்களோடு பேசு, மக்களுக்கு என்ன தேவையோ அதை செய் ” என்று சொன்னவர் தான் அண்ணா.அவர் வழியில் தான் நாம் பயணித்து வருகிறோம்.
நான் இன்றைக்கு பல இடங்களுக்கு சென்று பார்வையிடும் போது தொடர் மழை காரணமாக தண்ணீர் பட இடங்களில் தேங்கி நிற்கிறது.அனால் ஒரு மணி நேரம் மழை நின்ற பின் அந்த தண்ணீர் வடிந்து விடுகிறது. ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும்போது மக்கள் நாம் வந்து பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பிரச்சனை அரசின் கவனத்திற்கு சென்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் நம்மை அழைத்து செல்கிறார்கள். இந்த மழையில் மக்களோடு நாம் நின்றோம் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்றார்.

