அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியது.
அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம் மற்றும் உட்கட்சி பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஒன்றிணைந்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.


