24-25 நிதியாண்டில் இதுவரை 3 ஆயிரம் புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2666 பேருந்துகள் ஜெர்மனியைச் சேர்ந்த வங்கியின் நிதியுதவி மூலம் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1000 மின்சாரப் பேருந்துகளுடன் உள்பட 7,000 புதிய பேருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் கொள்முதல் செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இயங்கிவரும் 52 சதவீதம் பேருந்துகள் பழைய பேருந்துகளாக உள்ளன. உள்ளூர் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பதால் பல பெண்கள் தினசரி போக்குவரத்துக்கு அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள பல பேருந்துகளில் மேற்கூரை உடைந்து தொங்குவது, ஓட்டை விழுந்து மழைநீர் ஒழுகுவது வாடிக்கையாக உள்ளது. பேருந்துகளில் சீட் கிழிந்து பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. பழுதான படிக்கட்டுகள் திடீரென்று கழன்று விழுகின்றன.

இதனால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் பல இடங்களில் விபத்து நேர்ந்ததும் செய்திகளில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை 7,030 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இப்போது 6 மாநில போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 20,260 பேருந்துகள் உள்ளன. இதில், 10,582 பேருந்துகள் மிகவும் பழமையானவையாக உள்ளன. மேலும் இப்போது உள்ள பேருந்துகளின் சராசரி வயது 9 ஆண்டுகள் என்றும் போக்குவரத்துத் துறை சொல்கிறது.

இதற்கு முன் 2022-23, 2023-24 நிதியாண்டுகளில் தலா 1000 புதிய பேருந்துகளும் 2024-25 நிதியாண்டில் இதுவரை 3 ஆயிரம் புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2666 பேருந்துகள் ஜெர்மனியைச் சேர்ந்த வங்கியின் நிதியுதவி மூலம் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தினமும் 1.76 கோடி பயணிகள் பயணம் செய்கிறார்கள் இவர்களில் 51.47 லட்சம் பேர் பெண்கள். இவர்களுக்காக பிங்க் நிறத்தில் 7,179 சாதாண கட்ட உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here