AsianYouthGames2025: 60 கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை! – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய யூத் போட்டிகளில், 60 கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் வென்ற இரண்டு வெள்ளிப் பதக்கங்கள்; முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு.

prime9logo
172 Views
1 Min Read
Highlights
  • கோவில்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்.
  • ஆடவர் 60 கிலோ பளுதூக்கும் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மகாராஜனுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும் என உறுதியளித்தார்.

பஹ்ரைனில் நடைபெற்று வரும் மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகளில், 60 கிலோ பளுதூக்கும் பிரிவில், கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

” கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி, #AsianYouthGames2025-இல் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தம்பி மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!

முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைக்க, கோவில்பட்டிக்கு நான் வந்திருக்கும் வேளையில், இந்த இனிய செய்தியைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் நமது #DravidianModel அரசு துணைநிற்கும்!”  என தெரிவித்துள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply