பத்து நாட்களுக்குள் புதிய மாநில தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்
என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த நிலையில் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது..
அப்படியென்றால் தமிழ்நாட்டிலும் பாஜக தலைவர்
மாற்றப்படுகிறாரா? என்ற விவாதம் எழுந்தது
மக்களைவைத் தேர்தலில் படு தோல்வி..
அதிமுக கூட்டணி முறிவு, சொந்த கட்சியனரை ஒதுக்கி வைத்தது
போன்ற சர்ச்சைகளால் உட்கட்சி வட்டாரத்தில் அண்ணாமலை மீது அதிருப்தி நிலவி வருகிறது
கூட்டணி முறிவுக்கும், தேர்தல் தோல்விக்கும்
அண்ணாமலையின் எதேச்சதிகார போக்கு தான்
காரணம் என்ற குற்ற சாட்டுகள் எழுந்தன
ஆளுநர் பதவியில் இருந்து விலகி மக்களைவைத் தேர்தலில்
போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜனும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திருந்தார்
இதனால் 2026 சட்ட மன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது
இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழிசை பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை பாஜக மாநிலத் தலைவர்கள் 10 நாட்களுக்குள் மாற்றப்படுவார்கள் என்று
தெரிவித்திருந்தார்
கடந்த வருடம் ஜுலை மாதத்துடன் பாஜக தலைவர் பதவிக்கலாம் முடிவடைந்த நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மீண்டும் அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். அனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அண்ணாமலை மீண்டும் தலைவராவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை தலைவர் பதவியை கைப்பற்ற டெல்லிக்கு சென்று வந்துள்ளதாகவும், டெல்லியில் மாநில தலைவரான ஜெ பி பட்டாவை சந்தித்த தமிழிசை தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகளை பற்றி பேசியதாகவும், மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்தால் மட்டுமே சட்ட மன்ற தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்பதால் தமிழக பாஜக தலைவர் பொறுப்பை தனக்கு வழங்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது
அதிமுகவைப் பொறுத்தவரை அண்ணாமலை மட்டுமே பிரச்சனையாக இருப்பதால் பாஜக மாநிலத் தலைவராக மீண்டும் தமிழிசையை நியமித்து
கூட்டணிக் கணக்குகளை சரி செய்து விடலாம் என்று என பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.