நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன், இயக்குநர்கள் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் நேற்று நெல்லை சென்றனர்.
பைசன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரிக்கிறது.
நெல்லை சென்ற அவர்களை வரவேற்க திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே ரசிகர்கள் ஹோட்டல் முன்பு குவியத் துவங்கினர்.
தொடர்ந்து தனியார் ஓட்டலில் இருந்து கிளம்பிய அவர்களுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
மேலும் நடிகர் துருவ் விக்ரமுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் நடிகர் விக்ரம் தொடங்கி வைக்க படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.