கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி மக்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்த செல்லூர் ராஜூ அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள் என கூறினார்.

மதுரையில் 10 லட்சம் ரூபாய் செலவில் விநாயகர் கோவில் நகரில் புதிதாக சத்துணவு அங்கன்வாடி மையம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 3 ஆண்டுகளாக எந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. மாநகராட்சி பாராமுகமாக இருக்கின்றது என கூறினார். எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திர விபரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது போல தெரிகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பயப்படுவது காங்கிரஸ், திமுக தான், நாங்கள் இல்லையென கூறினார். திமுக கூட்டணியில் எத்தனை கட்சி சேர்ந்தாலும் மக்கள் அவர்களை ஏற்கப்போவதில்லை.

அதிமுக கூட்டணிக்கு வாங்க என நாங்கள் யாரையும் கூப்பிடவில்லை என தெரிவித்தவர், பாஜகவையே வேண்டாம் என்று சொன்னவர்கள் நாங்கள் என தெரிவித்தார். வாயிலேயே வடை சுடுவதில் இந்திய அளவில் மோடியும், தமிழகத்தில் ஸ்டாலினும் முதலிடத்தில் உள்ளனர். மத்தியில் பிரதமர் மோடி மாநிலத்தில் தமிழக அரசு என இருவரும் மாறி மாறி வாயாலேயே வடை சுடுகிறார்கள். பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். தமிழக மக்கள் கெட்டிக்காரர்கள் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.

கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி மக்கள் ஏற்க மாட்டார்கள். அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோவில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.தமிழக மக்கள் தான் எஜமானர்கள் எந்த கட்சியில் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளார்கள் தொண்டர் பலம் எந்த கட்சியில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here