கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் பூமியை சக்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியிருக்கிறது. அந்த புயல் சூரியனில் இருந்து வெளியாகும் Coronal Mass Ejections எனப்படும் பிளாஸ்மா மற்றும் காந்தப் புலங்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சூரியப் புயலானது ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வானில் ஒளிக் காட்சிகளாகத் தென்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் நேரடியாகக் கண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த சூரியப் புயலால் தொலைத் தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கு முன் 2003 ஆம் வருடம் சுவீடனில் சூரியப் புயல் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.