18 வயது குறைவானவர்கள் பைக், கார் ஓட்டி பிடிப்பட்டால், அவர்கள் ஓட்டிய வாகனத்தின் ஆர்சியை ரத்து செய்யப்படும் . இந்த விதிமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது

18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருவதால் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகிறது. இதை தடுக்க மத்திய அரசு போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்டத்தை கடுமையாக்கியுள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..

மேலும் அவர்களின் பெற்றோருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சிறுவர் ஓட்டிய அந்த குறிப்பிட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் (ஆர்சி) ரத்து செய்யப்படும் மேலும் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here