நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 25 நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் பாஜகவில் கட்சியை இணைத்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சரத்குமார் அந்த பகுதி முழுவதும் சுற்றி வருகிறார். இந்த நிலையில், சிவகாசியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது, விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லையெனவும், மேலிடதிலிருந்து போட்டியிட கேட்டுக் கொண்டதால் இங்கு போட்டியிடுகிறேன் என தெரிவித்தார். பணம் கொடுப்பது என்பது இல்லாமல் மக்களுக்கான திட்டங்கள் உருவாக்க வேன்டும், மக்களுக்கான அடிப்படை தேவையை, வேலை வாய்ப்பு தொழில் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

விருதுநகர் தொகுதி ஒன்றும் எங்களுக்கு புதிது அல்ல அதிக முறை இங்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளோம், காமராஜருக்கு மணி மண்டபம் அமைத்துள்ளோம், இங்கு சொந்த பந்தம் அதிகம் பேர் உள்ளதாக தெரிவித்தவர், விருதுநகர் போட்டியிடுவதில் சந்தோசம் அடைந்துள்ளேன் என கூறினார். விருதுநகரில் வெற்றி எளிமையாக கிடைக்கும் வகையில் கடுமையாக உழைத்து வைத்துள்ளார்கள், இன்னும் கொஞ்சம் உழைத்தால் நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் வேடப்பாளரான விருதுநகர் தொகுதியின் எம்பி மாணிக்கம் தாகூரின் செயல்பாடு குறைவாக இருந்ததாகவும் மக்களை பெரிதாக சந்திக்கவில்லை என கூறுகிறார்கள். தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயகாந்த மகன் விஜயபிரபாகரனை பொறுத்தவரை என் மகளுடன் படித்தவர், அவர் எனக்கும் மகன் மாதிரிதான், சின்ன பையன் அவர் நல்லா இருக்க வேண்டும் என ராதிகா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here