சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதி கனமழையால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டது .
இந்நிலையில் விமனர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது, பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும், வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியாகும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மழை நீர் வடிகால் அமைத்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.