விவசாயி வீட்டுக்குச் சென்ற முதல்வர் விஜய்: மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி

Priya
703 Views
2 Min Read

மேட்​டூர் அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைத்த தமிழக முதல்​வர் விஜய், சின்​னக்​காவூர் பகு​தி​யில் விவ​சாயி ஒரு​வரின் வீட்​டுக்​குச் சென்று குடும்​பத்​தினரைச் சந்​தித்​து, விவ​சாயப் பணி​கள் குறித்து கேட்​டறிந்​தார்.

மேட்​டூர் அணை​யில் நிகழ்ச்​சியை முடித்த முதல்​வர், ஆய்வு மாளி​கை​யில் சிறிது நேரம் ஓய்​வெடுத்​து​விட்டு புறப்​பட்​டார். அப்​போது மேட்​டூர் அனல் மின் நிலை​யம் அருகே உள்ள சின்​னக்​காவூர் கிராமத்​தில் வசிக்​கும் விவ​சாயி ராம​சாமி​யின் வீட்​டுக்​குச் சென்​றார். ராம​சாமி​யின் குடும்​பத்​தினர் முதல்​வரை உற்​சாக​மாக வரவேற்று தோட்​டத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

அப்​போது மூதாட்டி செல்​லம்​மாள், முதல்​வரின் கையைப் பிடித்து கன்​னத்தை வருடி வாழ்த்து தெரி​வித்​தார். பின்னர், அங்​கிருந்த விவ​சா​யிகள் மற்​றும்

குடும்​பத்​தினருக்கு முதல்​வர் வேட்​டி, சேலை வழங்​கி​னார். மேலும், தான் அணிந்​திருந்த கூலிங் கிளாஸை மூதாட்டி செல்​லம்மாளுக்கு அணி​வித்​தார். முதல்​வர் அங்​கிருந்து புறப்​பட்​டபோது, மூதாட்​டி​யின் குடும்​பத்​தினர் அனை​வரும் ரோடு வரை வந்து வழியனுப்​பினர்.

இதுகுறித்து மூதாட்டி செல்​லம்​மாள் கூறுகை​யில், “முதல்​வர் எங்​கள் வீட்​டுக்கு வரு​வார் என்று கனவிலும் நினைக்​க​வில்​லை. அவரை பார்த்ததும் பேச்சு வரவில்​லை. எங்​கள் தோட்​டத்தை பார்​வை​யிட்டு பேசியது மகிழ்ச்​சி​யாக இருந்​தது” என்​றார். மேட்​டூரில் இருந்து சேலம் மாவட்ட எல்​லை​யான தொப்​பூர்

பகு​திக்கு முதல்​வர் வேனில் சென்​ற​போது, சாலை​யோரத்​தில் நின்​றிருந்த மூதாட்​டிகளைப் பார்த்து வாக​னத்தை நிறுத்​தி​னார். கீழே இறங்​கிய அவர், அவர்​களிடம் நலம் விசா​ரித்​தார். பின்​னர் அவர்கள் முதல்​வருக்கு வாழ்த்து தெரி​வித்தனர்.

மேட்​டூர் அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறக்க முதல்​வர் விஜய் சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்​தார். பின்​னர் வேனில் மேட்​டூருக்​குச் சென்​றார். விமான நிலை​யம் முதல் மேட்​டூர் வரை​யிலும், மீண்​டும் மேட்​டூரில் இருந்து விமான நிலை​யம் வரை​யிலும் அவர் ரோடு ஷோ சென்​றார்.

சுமார் 40 கி.மீ. தொலை​வுக்கு இரும்​புத் தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. சாலை​யின் இரு​புறங்​களி​லும் பேனர்​கள் வைக்​கப்​பட்​டிருந்​ததுடன், பொது​மக்​கள் மலர்​தூவி முதல்​வருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். சிலர் வேல், புகைப்​படம் உள்​ளிட்ட பொருட்​களை பரி​சாக வழங்​கினர்.

பொது​மக்​கள் வழங்​கிய புகைப்​படங்​களில் முதல்​வர் கையெழுத்​திட்டு திருப்பி வழங்​கி​னார். வரவேற்று பல இடங்களில் பேனர்​கள் வைக்​கப்​பட்​டிருந்​தன. மாவட்ட எல்​லை​ யான திமிரி​கோட்டை பகு​தி​யில் தனி​யார் பள்ளி மாணவ, மாணவி​கள் முதல்​வரை வரவேற்ற சம்​பவம் விமர்​சனத்​துக்​குள்​ளானது.

முன்​ன​தாக சேலம் விமான நிலை​யத்​தில் அமைச்​சர்​கள், மாவட்ட நிர்​வாகம் மற்​றும் காவல்​துறை உயர் அதி​காரி​கள் முதல்​வரை வரவேற்​றனர். மேட்​டூர் அணை​யியில் காவல்​துறை அணிவகுப்பு நடத்தப்​பட்​டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply