நேர்காணல் உடைய பதவிகளுக்கான தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு இன்று வெளியீடு

Priya
801 Views
2 Min Read

நேர்​காணல் உடைய பதவி​களுக்​கான ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி இன்று வெளி​யிடு​கிறது. டிஎன்​பிஎஸ்சி தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் அறி​விப்பு தொடர்​பான முழு விவரங்​களை​யும் தேர்​வர்​கள் அறிந்​து​கொள்​ளலாம்.

அரசுப் பணி​களுக்கு ஆட்​களை தேர்​வுசெய்து வரும் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்சி) 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி தேர்​வுக்​கான அறி​விப்​பு​களை வெளி​யிட்டு தேர்​வு​களை நடத்தி வரு​கிறது.

அந்த வகை​யில், நேர்​காணல் உடைய பதவி​களுக்​கான ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான அறி​விப்பு ஆக.31-ம் தேதி வெளி​யிடப்​பட்டு அதற்​கான தேர்​வு​கள் நவம்​பர் மாதம் நடைபெறும் என தேர்வு அட்​ட​வணை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, அத்​தேர்​வுக்​கான அறி​விப்பு இன்று வெளி​யிடப்​படு​கிறது. டிஎன்​பிஎஸ்சி தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் அறி​விப்பு தொடர்​பான முழு விவரங்​களை​யும் தேர்​வர்​கள் அறிந்​து​கொள்​ளலாம்.

என்​னென்ன பதவி​கள்? – அரசு பொதுத் ​துறை நிறு​வனங்​களின் உதவி மேலா​ளர், துணை மேலா​ளர், தமிழ்​வளர்ச்​சித்​ துறை உதவி இயக்​குநர், வேளாண் உதவி இயக்​குநர், புள்​ளி​யியல் துறை உதவி இயக்​குநர், நகர் மற்​றும் ஊரமைப்பு உதவி இயக்​குநர், தொழில் வணி​கத் ​துறை உதவி இயக்​குநர், கூட்​டுறவு தணிக்​கைத்​துறை உதவி இயக்​குநர், மீன்​வளத்​ துறை உதவி இயக்​குநர், சிப்​காட், டிட்கோ உதவி பொது​மேலா​ளர், அரசு போக்​கு​வரத்​துக்​ கழக உதவி மேலா​ளர் (சட்​டம்), தோட்​டக்​கலை உதவி இயக்​குநர், மாவட்ட குழந்தை பாது​காப்பு அலு​வலர், மாவட்ட நூலக அலு​வலர், ஆவின் மேலா​ளர் (கால்​நடை மருத்​து

​வம்), தலை​மைச் செயலக செய்தியாளர், மாவட்ட சுற்​றுலா அலு​வலர் உள்​ளிட்ட பதவி​கள் நேர்​காணல் உடைய பதவி​களுக்​கான தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வின்கீழ் வரு​கின்​றன.

டிஎன்பிஎஸ்சி ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான அறி​விப்பு கடந்த 2025-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்டது. அதில் மொத்​தம் 330 காலி​யிடங்​கள் இடம்​பெற்​றிருந்தன.

அரசுத் துறை​களில் அதிக காலி​யிடங்​கள் உள்​ள நிலையில், அவற்றை விரைந்து நிரப்பவேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து வலி​யுறுத்​தி வரும் நிலை​யில், இன்று அறிவிக்​கப்​படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்​வில் காலி​இடங்​கள் 500-க்​கும் மேல் இருக்கும்​ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply