தேசிய டிராக் சைக்கிளிங்: தமிழக அணி புதிய சாதனை

Priya
601 Views
1 Min Read

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 78-வது சீனியர், 58 -வது ஜூனியர் மற்றும் 41-வது சப் ஜூனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஜூனியர் மகளிர் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

தபிதா, ஹாஷினி, ஜெய் ஜோத்ஸ்னா ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி ஜூனியர் அணி ஸ்பிரிண்ட் பிரிவில் 1:6.363 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றது.

இதன்மூலம் 2021-ல் நடைபெற்ற 49-வது தேசிய ஜூனியர் போட்டியில் அந்தமான் & நிக்கோபார் அணி படைத்திருந்த 1:16.593 நிமிட சாதனையை தமிழக வீராங்கனைகள் முறியடித்தனர். மேலும் இந்தப் போட்டியின் ஜூனியர் ஒரு கிலோமீட்டர் ஐடிடி போட்டியில் தபிதா தங்கமும், மகளிர் ஜூனியர் ஸ்கிராட்ச் ரேஸில் கே.ஹாசினி வெள்ளியும், ஜூனியர் ஸ்பிரிண்ட் பிரிவில் ஜெய் ஜோத்ஸ்னா வெண்கலமும் வென்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply