கருணாநிதியின் 103-வது பிறந்தநாளையொட்டி, தேனாம்பேட்டை, அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்படுகிறது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் நாளை கொண்டாடப்பட இருக்கிறார்கள். இந்நாளின் முக்கிய நிகழ்வாக, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
நாளைய தினத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்:
8.00 மணி: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை
8.15 மணி: சென்னை, அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
8.30 மணி: சென்னை, கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
8.45 மணி: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை
9.30 மணி: சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் கழகக் கொடி ஏற்றுதல், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைகள் திறப்பு

