“முதுகில் குத்தியவர் அவர்தான்” அன்புமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ராமதாஸ்

பா.ம.க-வில் வெடித்த உட்கட்சிப் பூசல்: அன்புமணிக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.

Siva Balan
By
Siva Balan
Sivabalan is a passionate Tamil news journalist dedicated to covering politics, social issues, cinema, and people’s stories with accuracy and depth. Known for his professional approach,...
4677 Views
3 Min Read
Highlights
  • அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை.
  • அன்புமணி மக்கள் மற்றும் கட்சியினரை திசை திருப்ப முயல்வதாக ராமதாஸ் குற்றச்சாட்டு.
  • "முதுகில் குத்தியவர் அன்புமணி தான்" - ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு.
  • கட்சி வளர்ச்சிக்கு அன்புமணி இடையூறாக இருப்பதாக ராமதாஸ் தெரிவிப்பு.
  • கட்சியின் நிறுவனரான தனக்கே அன்புமணி உத்தரவிட்டதாக ராமதாஸ் வேதனை.
  • 4 சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தது யார்?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தருமபுரி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய கருத்துகள் குறித்துப் பேசிய அவர், அன்புமணி ராமதாஸ் மக்கள் மற்றும் கட்சியினரை திசை திருப்ப முயல்வதாகவும், தான் செய்த தவறுகளை மறைத்து அனுதாபம் பெற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். அதற்கான பதிலை சொல்வது எனது கடமையாகும். இனிப்பை தவிர்த்து கசப்பான வார்த்தைகளை கொண்ட மருந்தை தான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், “எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் மத்திய அமைச்சராகி குற்றம் செய்துவிட்டேன். அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை தொடங்கி முதுகில் அடித்தவர் அன்புமணி தான். என்ன நடந்தது என ஆதாரத்தோடு ஒளிவு மறைவின்றி இப்போது அப்படியே வெளிப்படுத்துகிறேன். பொதுக்குழுவில் என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். மேடை நாகரீகம், சமூக நாகரிகம் என எதையும் பார்க்காமல் பொது மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார். முகுந்தனை வீட்டில்.எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க தான் முகுந்தனை நியமித்தேன். உடனே மேடையிலேயே காலை ஆட்டிக் கொண்டு மறுப்பு தெரிவித்தது சரியா.. மைக்கை தூக்கி எனது தலையில் போடாமல் மேஜை மீது வீசியது சரியான செயலா? 45 ஆண்டுகால அரசியலில் கட்சிக்கு அவப்பெயரை பெற்று தந்துவிட்டார். கட்சிக்கு அன்புமணி மார்பில் குத்திவிட்டார். அதனை கண்டு நான் இடிந்து போய்விட்டேன்.” என்று ராமதாஸ் உணர்ச்சிவசப்பட்டார்.

கட்சி வளர்ச்சிக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்து வந்ததாகவும், ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்த விரும்பியபோது, அதற்கு அன்புமணி தடையாக இருந்ததாகவும் ராமதாஸ் கூறினார். நியமனக் கடிதத்தை கொடுத்து அனுப்பிய சில நிமிடங்களிலேயே அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போடுமாறு அன்புமணி கூறியதாக அவர் தெரிவித்தார். இதே செயல் தான் முகுந்தனுக்கும் நடந்ததாகவும், பொங்கல் சமயத்தில் முகுந்தன் நியமனம் குறித்து அவரது தாய் கேட்டதும், ஒரு பொருளைத் தூக்கி தன் தாயின் மீது அன்புமணி அடித்ததாகவும், நல்ல வேளையாக அது அவர் மீது படவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

கட்சியை தான் அரும்பாடுபட்டு வளர்த்ததாகவும், கட்சி நிர்வாகக் குழுவில் ஒருவர் பேசினால், அவரை பேசவிடாமல் அன்புமணி தடுப்பதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார். “உனக்கு தலைவர் பண்பு சிறிதும் இல்லை என அன்புமணியிடம் சொன்னேன். கட்சியின் வளர்ச்சிக்காக தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்கு நான் சென்றிருந்த போது அங்கு நான் மைக் வைத்து பேச கூடாதுன்னும், 200 பேருக்கு மேல் வர கூடாதுன்னும் சொல்லியிருக்கிறார். கட்சியின் நிறுவனருக்கே இந்த நிலை. திருமண மண்டபம் கூடாது. தங்கி இருக்கும் அறையிலேயே கட்சி நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என கட்சி நிறுவனருக்கு ஆர்டர் போடுகிறார். யார் உழைத்து வளர்த்த கட்சி.. யார் யாருக்கு கட்டளை போடுவது? கீழ்த்தரமாக நடத்திய விதம் ஏற்று கொள்ள முடியாது. இதை எல்லாம் பார்த்த நான் நிர்வாகக் குழு கூட்டத்திலேயே தலைமை பண்பு உனக்கு இல்லை என அன்புமணியிடம் நேரடியாக நான் சொன்னேன்” என்று ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார்.

Share This Article
Sivabalan is a passionate Tamil news journalist dedicated to covering politics, social issues, cinema, and people’s stories with accuracy and depth. Known for his professional approach, Sivabalan’s reporting is both engaging and trustworthy, offering readers clear insights into current affairs.
Leave a Comment

Leave a Reply