‘ஆரோக்கியமான முதுகெலும்பு – ஆரோக்கியமான மாணவர்கள்’ திட்டத்தை தொடங்க முதல்வர் விஜய்க்கு பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம் கோரிக்கை

Priya
25 Views
1 Min Read

பள்ளி​களில் ‘ஆரோக்​கிய​மான முது​கெலும்பு – ஆரோக்​கிய​மான மாணவர்​கள்’ திட்​டத்தை தொடங்க வேண்​டும் என்று முதல்​வர் விஜய்க்​கு, இந்​தி​யன் அசோசி​யேஷன் ஆஃப் பிசி​யோதெரபிஸ்ட்​கள் சங்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக, அந்த ​சங்​கத்​தின் மாநில தலை​வர் வெ.கிருஷ்ணகு​மார் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இன்​றைய கால​கட்​டத்​தில் பள்ளி மாணவர்​களிடையே முதுகு​ வலி, கழுத்​து​வலி, உடல் பரு​மன், பாத அமைப்பு மாற்​றங்​கள் போன்ற பிரச்​சினை​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

குறிப்​பாக அதிக எடை​யுள்ள புத்​தகப் பைகள், நீண்​டநேரம் அமர்ந்து படித்​தல், மொபைல் மற்​றும் டிஜிட்​டல் சாதனங்​களின் அதிக பயன்​பாடு போன்​றவை குழந்​தைகளின் உடல் வளர்ச்​சியை பாதிக்​கின்​றன.

இதைக்​கருத்​தில் கொண்​டு, ‘ஆரோக்​கிய​மான முது​கெலும்பு – ஆரோக்​கிய​மான மாணவர்​கள்’ என்ற திட்​டத்தை தமிழக அரசு பள்​ளி​களில் அறி​முகப்​படுத்​து​வது காலத்​தின் தேவை​யாகும். இந்த திட்​டம் என்​பது வெறும் உடல்​நலத்​திட்​டம் மட்​டுமல்ல.

இது, ஆரோக்​கிய​மான, தன்​னம்​பிக்​கை​யான, ஒழுக்​கமிக்க மற்​றும் போதை பழக்​கங்​களி​லிருந்து பாது​காக்​கப்​பட்ட எதிர்​கால தலை​முறையை உரு​வாக்​கும் ஒரு சமூக முதலீ​டாக அமை​யும்.

எனவே, தமிழக அரசு, கல்​வித்​துறை மற்​றும் சுகா​தா​ரத்​துறை இணைந்து இந்த திட்​டத்தை மாநிலம் முழு​வதும் செயல்​படுத்த தமிழக முதல்​வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்த திட்​டத்​தின் மூலம் ஆண்​டு​தோறும் அனைத்து பள்ளி மாணவர்​களுக்​கும் உடல்​நிலை பரிசோதனை மேற்​கொள்ள வேண்​டும். இதன்​மூலம் தோள்​பட்டை முன்​சாய்​வு, முதுகுத்​தண்டு வளைவு, பாத வளைவு குறை​பாடு, உடல் பரு​ம​னால் ஏற்​படும் இயக்க பிரச்​சினை​கள் மற்​றும் கழுத்து மற்​றும் முதுகு​வலி பிரச்​சினை​களை ஆரம்​பத்​திலேயே கண்​டறிந்​து, பிசி​யோதெரபி வழி​காட்​டு​தல் மற்​றும் தேவை​யான பயிற்​சிகள், சிகிச்​சைகள் மூலம் சரிசெய்ய முடி​யும்.

அதிக எடை​யுள்ள புத்​தகப் பைகள் குழந்​தைகளின் முதுகெலும்பு வளர்ச்​சியை பாதிக்​கும் அபா​யம் உள்​ளது. அதனால், தேவையற்ற புத்​தகங்​கள் சுமப்​பதை குறைக்க வேண்​டும். பள்ளி வகுப்​பறை​களில் உடல் அமைப்​புக்கு ஏற்ற அமர்வு முறை மாணவர்​களின் உடல் நலத்​துக்கு அவசி​ய​மாகும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply