தமிழகத்தில் மீண்டும் ஆலை அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது: முதல்வருக்கு வைகோ கோரிக்கை

Priya
15 Views
1 Min Read

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ வெளி​யிட்ட அறிக்கை​: சுற்​றுச்​சூழலுக்​கும், விவ​சா​யத்​துக்​கும், மீனவர்​களுக்​கும் பெரும் தீங்கு விளை​வித்த வேதாந்தா குழு​மத்​தின் ஸ்டெர்​லைட் ஆலையை எதிர்த்து மதி​முக​வும், வணி​கர் சங்​கங்​களும், தூத்​துக்​குடி சுற்​று​வட்​டார கிராம மக்​களும் கடுமை​யான போராட்​டங்​களை நடத்​தினர்.

அன்​றைய தமிழக அரசு, போராட்​டக்​காரர்​களை நசுக்​கும் நோக்​கத்​தில் 13 பேரை சுட்​டுக்​கொன்​றது. இதைத்​தொடர்ந்து ஸ்டெர்​லைட் வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தி​லும், உயர் நீதி​மன்​றத்​தி​லும் ஆண்டு கணக்​கில் நடத்​தப்​பட்​டு, இறு​தி​யில் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் சிவ​ஞான​ம், பவானி சுப்​பு​ராயன் கொண்ட அமர்வு ஸ்டெர்​லைட் ஆலையை நிரந்​தர​மாக மூடும் தீர்ப்பை வழங்​கியது.

இந்​தி​யா​வில் தாமிரம் கிடைப்​பது இல்லை என்று அண்​மை​யில் தெரிவித்த பிரதமர் மோடி, அப்​படி தாமிரம் உற்​பத்தி செய்​யும் தொழிற்​சாலையை அமைக்க வேண்​டு​மா​னால் அவரது குஜ​ராத் மாநிலத்​திலேயே அமைக்​கலாமே? தமிழக மக்​கள் நலனை காக்க வேதாந்தா குழு​மம் தமிழகத்​தில் மீண்​டும் ஆலை அமைக்க எவ்​விதத்​தி​லும் முதல்​வர் அனு​மதி வழங்​கக் கூடாது. இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply