சென்னையில் மாநகராட்சி சார்பில் 55 பள்ளிகளில் குளிர் கூரை அமைக்க நடவடிக்கை

Priya
13 Views
1 Min Read

மாநக​ராட்சி சார்​பில் சென்​னை​யில் 55 குளிர் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதுதொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்​னை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட முன்​னோடி செயல்​பாடு​களின் அனுபவத்​தின் அடிப்​படை​யில், பள்​ளி​களில் குளிர் கூரை பூச்சு வேலைகள், வகுப்​பறை​கள் மற்​றும் கூரைகளின் வெப்​பநிலையை கணிச​மாக குறைத்​துள்​ளன.

இந்த திட்​டம் தற்​போது தமிழ்​நாடு காலநிலை மாற்​றப் பணி​யின் ஒரு பகு​தி​யாக விரிவு செய்​யப்​படு​கிறது. மாநக​ராட்​சி​யின் 49 பள்​ளி​கள், 6 அரசு பள்​ளி​கள் என மொத்​தம் 55 பள்​ளி​களில் இத்​திட்​டம் செயல்ப​டு​த்தப்பட உள்​ளது. இதில் 5 அரசுப் பள்​ளி​களில் குளிர் கூரை அமைக்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

பள்​ளி​களில் அதிக ஒளி பிர​திபலிக்​கும் கூரையை குளிர் கூரை​யாக உரு​வாக்​கு​வதன் மூலம் வெப்ப அழுத்​தத்தை குறைத்​து, மின்​சார தேவையை குறைப்​ப​தற்​கும், அரசு பள்ளி கட்​டமைப்​பில் காலநிலைச் செயல்​பாடு​களை மையப்​படுத்​து​வதற்​கும் உதவி​யாக உள்​ளது.

இதுதொடர்​பாக மாநக​ராட்​சிப் பள்ளி தலை​மை​ ஆசிரியர்​கள், ஆசிரியர்​களுக்​கான பயிற்​சிக் கூட்​டம் ரிப்​பன் மாளி​கை​யில் ஆணை​யர் சமீரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்றது.

இணை ஆணை​யர் (கல்​வி) க.கற்​பகம், தமிழ்​நாடு பசுமை காலநிலை நிறுவன மேலாண்மை இயக்​குநர் ஆஷா அஜித், முதன்மை செயல் அலு​வலர் பகன் ஜக்​தீஷ் சுதாகர், தமிழ்​நாடு காலநிலை மாற்ற இயக்​கத்​தின் உதவி திட்ட இயக்​குநர் துஷ்கர் ஹரி ஷிண்டே உள்​ளிட்​டோர் இதில் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply