தமிழ்வளர்ச்சி – செய்தித்துறை மற்றும் மதுரை உலகத்தமிழ் சங்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ‘ மேடைப்பேச்சு – ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி ‘ பன்னாட்டு பயிலரங்கம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த பயிலரங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்காக, நீங்கள் உணர்ச்சிபூர்வமாக அழுததை எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய அமைச்சர்,
உணர்ச்சிகளும், அறிவும் சேர்ந்து தான் ஒருவருடைய பேச்சு அமைந்திட வேண்டும்.
இது பேச்சாளர்களுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்தமாக தமிழினத்திற்கே சொல்லக்கூடியதாகவும் நாம் அதை பார்க்க வேண்டும்.
உணர்ச்சிகள் மட்டும் அதிகமாய் இருந்து அறிவு குன்றிப்போய் இருந்தால் அது விலங்கிற்கு சமமானது.அல்லது உணர்ச்சிகள் மொத்தமாய் குன்றிப்போய் அறிவுமட்டும் அதிகமாய் இருந்தால் அது மரத்திற்கு சமமானது என்கிறார் வள்ளுவர்.
என்னை பொறுத்தவரையில் முதலில் நான் மனுஷன்.
‘ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், மனிதனாக மாற மறந்துவிட்டான்’ என்றார்.

