சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் சுய முகவரி இழந்து வேடிக்கை பார்க்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது எல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த தெரியாத ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக தினமும் செய்திகள் வருகின்றன.
ரூட் தல பிரச்னை துவங்கி, மாணவனுக்கு வெட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. தமிழக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இரவு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார்களின் கையை விட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஓங்கி இருக்கின்றன.
சமூக விரோதிகளை ஒடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறை சுய முகவரி இழந்து சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழக போலீசுக்கு இனி முழு சுதந்திரம் வழங்கி சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.