சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய சென்னை மக்களவைத்தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிபேட்டையில் இன்று காலை பாஜக வேட்பாளர் வினோஜ்க்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது ஆளுயர அளவில் பெரிய மாலை ஒன்றை ஜேசிபி வாகனத்தின் மூலம் எடுத்து வந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைவரும் பதிப்புக்குள்ளானார்கள்.
அங்கு கூடியிருந்த பாஜக நிர்வாகிகள் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ்க்கு வரவேற்பு கொடுக்க கூடியதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலையில் ஈடுபடமுடியாமல் அவதிக்குள்ளானார்கள். இந்த வீடியோக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது