தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டை மூலமாக, குடும்ப நபர்களின் எண்ணிக்கை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடுகிறது.
இதைத் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது வருகிறது.
இதையடுத்து ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்கவும், எடையில் ஏமாற்றம் செய்யவதை தடுப்பதற்கும் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகள் மூலமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன் முதற்கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் பாக்கெட்டுகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.