பள்ளிகளில் பாடம் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தி தண்டனை வழங்குவதை தடை செய்யும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகள் அமல்படுத்துவதை உறுதிசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ’’குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவது என்பது அவர்களை எந்த விதத்திலும் நல்வழிப்படுத்தாது. அவர்களும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிக்க வேண்டுமேயன்றி அவர்களிடம் அடக்குமுறையை கையாளக் கூடாது. இதுதொடர்பான விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விதிகளை கண்டிப்பாக தமிழகம் முழுவதும் அமல்படுத்த தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.