ஆந்திராவில் மெல்ல பரவும் கரோனா தொற்று: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

Priya
12 Views
1 Min Read

ஆந்​தி​ரா, கேரளா, கர்​நாடகா என தென்​னிந்​திய மாநிலங்​களில் கரோனா தொற்று தற்​போது மெல்ல பரவி வருகிறது.

ஆந்​தி​ராவைப் பொறுத்​தவரை கடப்பா மாவட்​டத்​தில் ​தான் இத்​தொற்று மீண்​டும் பரவத் தொடங்​கியது கண்​டறியப்​பட்​டது. அதனைத் தொடர்ந்து நெல்​லூர், குண்​டூர், ஓங்​கோல், விசாகப்பட்டினம், காக்​கி​நாடா என மாநிலம் முழு​வதும் தற்​போது 22-க்​கும் மேற்​பட்​டோர் கரோனா தொற்​றால் பாதிக்​கப்​பட்​டு சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இதில் கடப்​பா​வில் மட்​டுமே 8 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். குண்டூரில் 2 பேர், மற்ற மாவட்​டங்​களில் தலா ஒரு​வர் எனத் தொற்று ஏற்பட்டுள்ளது. இது​வரை கரோனா தொற்​றால் 4 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். நேற்​று ஓங்​கோலில் ஒரு​வருக்​குத் தொற்று உறுதி செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்​து, அங்​குள்ள மாவட்ட அரசு மருத்​து​வ​மனை​யில் கரோனா வார்டு தயார் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதற்​கான சிறப்பு வார்டு அமைக்​கப்​பட்​டு, மருத்​து​வர்​கள் மற்​றும் உதவி​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். காய்ச்​சல், உடல் வலி, சளி, இரு​மல் போன்​றவை தொடர்ந்து இருந்​தால் உடனடி​யாகக் கரோனா பரிசோதனை செய்​து​கொள்​ள வேண்டும் என மக்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply