மக்கள் இன்று டிவி பார்ப்பதற்கு இணையாக யூடியூப் பார்க்கிறார்கள், சொல்லப்போனால் பெரும் பகுதி வீடுகளில் ஸ்மார்ட் டிவி வந்த பின்பு கேபிள் கனெக்ஷன் வாங்குவதை நிறுத்திவிட்டு யூடியூப், OTT தளங்களை அதிகம் சப்ஸ்கிரைப் செய்யத் துவங்கிவிட்டார்கள்.
இப்படி நம் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்ட யூடியூப்-ல், கேபிள் டிவியில் இல்லாத ஒரு விஷயம் உள்ளது. இந்த சிறப்பான சேவை குறித்து டிவிட்டரில் சுந்தர் பிச்சை டிவீட் செய்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் முக்கியப் பிரிவு தான் யூடியூப். இப்பிரிவின் முன்னாள் தலைவர் சுசன் ராஜினாமா செய்த பின்பு, இப்பதவியில் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான யூடியூப், டிக்டாக் உடன் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபல டெக் யூடியூபரான மார்க்வெஸ் பிரவுன்லீ தனது எக்ஸ் கணக்கில் எல்லோரும் யூடியூப் வீடியோவை எந்த வேகத்தில் பார்ப்பீர்கள் என ஒரு வாக்கெடுப்பை நடந்தினார். இந்த வாக்கெடுப்பில் 1X, 1.25X, 1.5X, 2X ஆகிய ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்கெடுப்புக்கு 76.9 சதவீதம் பேர் 1X எனப் பதிவிட்டாலும். 7.2 சதவீதம் பேர் 2X எனத் தெரிவித்துள்ளனர். மார்க்வெஸ் பிரவுன்லீ-யின் கேள்விக்குச் சுமார் 2.45 பேர் பதில் அளித்த நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் பதில் அளித்துள்ளார்.
சுந்தர் தனது கமெண்ட்டில், இந்த வாக்கெடுப்பு முடிவுகளைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். பொதுவாக நான் ஏதாவது ஒரு வீடியோ-வை ரசிக்க வேண்டுமென்றாலோ அல்லது யோசிக்க வேண்டும் என்றாலோ 1X முறையில் தான் பார்ப்பேன். மற்றபடி அதிகப்படியான வேகத்தில் தான் பார்ப்பேன் எனச் சுந்தர் பிச்சை டிவீட் செய்துள்ளார். யூடியூப்-ல் ஃபாஸ்ட் பார்வேட் என்ற சேவை உள்ளது, இந்தச் சேவையில் ஒரு வீடியோவை வேகமாகப் பார்த்துக்கொள்ள முடியும். கேபிள் டிவி அல்லது லைவ் ஒளிபரப்பில் இத்தகைய சேவை இருக்காது. அதாவது 10 நிமிடம் பார்க்க வேண்டிய வீடியோவை 5 நிமிடத்தில் எவ்விதமான கட் இல்லாமல் வேகமாகப் பார்க்க முடியும், இதேபோன்ற சேவை நெட்பிளிக்ஸ்-ல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபாஸ்ட் பார்வோர்டு சேவையைப் பயன்படுத்த இதைப் பாலோ செய்யுங்கள். கம்ப்யூட்டரில் இந்தச் சேவையை எப்படிப் பெறுவது எனப் பார்ப்போம்.
முதலில் ஒரு யூடியூப் வீடியோவிற்கு செல்லுங்கள். பிளேயரின் மேல், செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்யவும். இதில் ஸ்பீட் என்பதைக் கிளிக் செய்து விரும்பும் வேகத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவு தான். இதுவே Android கருவிகள் எனில், இதைப் பாலோ பண்ணுங்க. முதலில் ஒரு யூடியூப் வீடியோவிற்கு செல்லுங்கள். வீடியோவை ஒருமுறை தட்டவும், பிறகு மேலும் என்பதைத் தட்டவும். பிளேபேக் வேகத்தைத் தட்டி, விரும்பும் வேகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.