தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக 21 இடங்களில் நேரடியாக களம் காண்கிறது. இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று முதல் தனது பரப்புரையை தொடங்குகிறார்.
அதன்படி, திருச்சி மற்றும் பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்கிறார். இதற்காக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிறுகனூரில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், திருச்சியில் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். பரப்புரைக் கூட்டம் நடைபெறுவதைSALEM முன்னிட்டு இன்று சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையை திருச்சியில் இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சி பொதுக்கூட்டத்தை தொடர்ந்து நாளை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். தேர்தல் பரப்புரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் போது, காலத்தின் அருமை கருதி, கட்சியினர் வேறு எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.