இந்தியன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜூன் 1 படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ‘நீலோற்பம்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள இந்த பாடலை அப்பி வி, ஸ்ருதிகா சமுத்ரலா பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியன் 2′ திரைப்படம் வருகிற ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.