சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கல்வராயன் மலைப்பகுதியிலும் விஷச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய அமர்வில் நீதிபதிகள், கல்வராயன் மலைப் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மக்கள் நிலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் கல்வராயன் மலைப் பகுதியை நீதிபதிகள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்று பார்வையிட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
அத்துடன் கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் கல்வராயன் மலைப் பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here