கலைஞரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிடப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு புதிய 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ரஜினிகாந்த், கமல் ஆகியோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், இதில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.