உத்தரபிரசேத்தில் உள்ள பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தில் கடந்த வருடம் எழுதிய பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள் கடந்த் ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த தேர்வில் நனறாகப் படிக்கும் மாணவர்களை விட குறிப்பிட்ட நான்கு மாணவ்ர்கள் 50 முதல் 54 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றனர்.

இதனால் சந்தேகமடைந்த நன்றாக படித்த மாணவர்கள் குறிப்பிட்ட நான்கு மாணவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்யும்படி தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விடைத்தாள்களைப் பார்த்தபோது விடைகளுக்குப் பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் போன்ற வாசகங்களை மட்டும் எழுதி நிரப்பியிருந்தனர். அதற்கு மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.

மாணவர்களிடம் இரண்டு பேராசிரியர்களும் லஞ்சம் பெற்றுக் கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து வினய் வர்மா, ஆஷிஷ் குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இரண்டு பேராசிரியர்களும் இதற்கு முன் பல மாணவர்களை தேர்வில் காப்பியடிக்க அனுமதித்ததாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here