ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு பகுதி தான் ஜப்பான் நாடு. ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கல் ஏற்படுகிறது .
அந்த வகையில் நேற்று அந்நாட்டு நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்தபட்சமாக 4.0 ரிக்டர் புள்ளிகளில் இருந்து அதிகபட்சமாக 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின.இதனால் ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின. இதைப்போல தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. அடுத்தடுத்து தொடர்ந்து 155 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர்.
மேலும் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சுனாமி எச்சரிக்கை மீண்டும் ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. அதேபோல் நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் அதிகமானோர் சிக்கி உள்ளதாகவும் ,அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.