உதவி கேட்ட நெதன்யாகு – நிபந்தனை வைத்த ஹமாஸ்!

ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள், நெதன்யாகுவின் கோரிக்கை, ஹமாஸின் நிபந்தனை என போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் புதிய திருப்பம்.",

parvathi
494 Views
1 Min Read
1 Min Read
Highlights
  • இஸ்ரேலிய பிணைக்கைதிகளுக்கு மருத்துவ உதவி வழங்க நெதன்யாகு கோரிக்கை.
  • காஸா மக்களுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்பட்டால் மட்டுமே பிணைக்கைதிகளுக்கு உணவு என ஹமாஸ் நிபந்தனை
  • ராணுவ நடவடிக்கை மூலம் பிணைக்கைதிகளை மீட்க நெதன்யாகு திட்டமிடுவதாக தகவல்.

➤ தங்களிடம் இருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் குறித்து ஹமாஸ் வீடியோ வெளியிட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவ உதவிகளை உடனே வழங்குமாறு செஞ்சிலுவை சங்க அமைப்பைக் கேட்டுக்கொண்டார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

➤ ஆனால், பிணைக்கைதிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்றால், காஸாவில் அனைவருக்கும் உதவிகள் கிடைக்கும் வகையில் மூடப்பட்ட பகுதிகள் அனைத்தையும் திறக்க இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.

➤ இந்நிலையில், ராணுவத்தின் உதவியால் பிணைக்கைதிகளை விடுவிக்க நெதன்யாகு உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

➤ இஸ்ரேலையும் பிணைக்கைதிகளையும் நெதன்யாகு பேரழிவுக்கு இட்டுச் செல்வதாகவும், ராணுவ நடவடிக்கை மூலம் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி ஒரு மோசடி என்றும் பிணைக்கைதிகளின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply