மும்பை,
இந்திய பங்குச்சந்தை இந்த மாத தொடக்கத்திலே கடும் சரிவை சந்தித்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் பெறத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறன்து.
அதன்படி, நிப்டி, சுமார் 120 புள்ளிகள் உயர்ந்து, 25,925 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தில் வர்த்தகமாகி
வருகின்றது. வங்கி நிப்டி, சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து, இப்போது 53,986 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மேலும், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 300 புள்ளிகள் உயர்ந்து 84,881 என்ற புதிய உச்சத்தை எட்டியது. நிப்டி, சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து, 24,898 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.
மறுபுறம், பேங்க் எக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 61,183 புள்ளிகளாக இருந்தது. இதற்கிடையில் வங்கி,
மிட்கேப் நிப்டி குறியீடு, 100 புள்ளிகள் அதிகரித்து, 13,238 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்