பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளுக்கும் இன்று 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள் கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாரின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை நடத்தினர்.
பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
டி.கே.சுரேஷின் நெருங்கிய நண்பரும் உறவினர்களின் வீடுகள் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அங்கு ரூ. 1 கோடியே 33 லட்சம் ரொக்க பணம், 23 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் நாளில் இதுபோன்ற வருமானவரித்துறை நடத்தப்பட்டதால் எதிர்க்கட்சியினரை முடக்கும் நோக்கில் பாஜக செயல்படுவாதாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.