அதிகாரங்களை பார்ப்பதற்கு முன்னர், மாநில ஆளுநர்கள் என்றால் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

மாநில ஆளுநர்கள் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளூநர் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு குறிப்பிடுகிறது. அதே சமயத்தில் ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக பதவி வகிக்கலாம்.

இவரின் முக்கிய பணி மாநிலத்தின் ஆட்சி மற்றும் செயல்பாட்டை பாதுகாப்பதே.

மாநிலத்தின் முதலமைச்சர் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில ஆளுநர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்களை, உரிய காரணத்துடன் சட்டப்பேரவை அறிவுருத்தும் போது, அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமும் ஆளுநருக்கு தான் உள்ளது.

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தான் தொடங்கப்படும்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநில ஆளுநர் தான் ஒப்புதல் தர வேண்டும். இந்த தீர்மானங்களுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் தரலாம். அதே சமயத்தில் மாநில அதிகாரங்களுக்கு வெளியில் இருக்கும் பட்சத்தில் அந்த தீர்மானத்தை குடியரசு தலைவரின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கலாம். தீர்மானங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றால் மறுபரிசீலனைக்கு மாநில சட்டப்பேரவைக்கு திரும்பி அனுப்பலாம். இல்லையென்றால் அந்த தீர்மானத்தை முழுமையாக நிராகரிக்கலாம்.

இது மட்டுமின்றி ஆளுநருக்கு இருக்கும் ஒரு முக்கியமான அதிகாரம் குடியரசு தலைவருக்கு மாநில Emergency-யை பரிந்துரை செய்வது. இதை குடியரசு தலைவர் ஆட்சி என்று குறிப்பிடுவர்.

மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தன் திறனை சட்ட ஒழுங்கு போன்ற பிரச்சனைகளால் இழக்கும் போது, மாநில Emergency-க்கான பரிந்துரையை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார். அதை பரிசிலனை செய்து தேவைப்படும் போது மாநில Emergency-யை குடியரசு தலைவர் அறிவிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here