சென்னை பெருநகர் பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தொடங்கியுள்ளது.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டரா விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய வாகன நிறுத்த கொள்கையை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.இதன்படி ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகன நிறுத்த இடங்களில் எத்தனை வாகனங்கள் உள்ளன, அங்கு ஏதாவது விதிமீறல் நிகழ்கிறதா உள்ளிட்டவைகள் கண்காணிக்கப்படும். இதற்கென்று ஒரு தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வாகன நிறுத்த இடத்தை முன் பதிவு செய்வதற்கும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதற்கும் பி.ஓ.எஸ் மிஷின்கள் பயன்படுத்தப்படும். இதற்காக தனிச் செயலி மற்றும் இணையதளம் ஆகியவைகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ள நிலையில், முன்னதாக இந்த பணியை மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி வரும் 14 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் டெண்டர் ஆவணத்தை தயார் செய்வதற்கான பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொள்ள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here