விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் “மழை பிடிக்காத மனிதன்”. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது விஜய் ஆண்டனியிடம் செய்தியாளர்கள்
மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்வி எழுப்பினர் .
அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி “படம் வெற்றி பெற்றவுடன் கமல் சாரை பார்த்ததுபோல் இளையராஜா சாரையும் பார்த்திருந்தால் இந்தளவிற்கு பிரச்சினை போயிருக்காது என நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்” என்றார்.