கடந்த ஆண்டு பல நடிகர்களின் அசத்தலான நடிப்பைத் திரையில் பார்க்க முடிந்தது. இதில் ரஜினியின் நடிப்பைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும்.ஜெயிலர் படத்தின் மூலம் நடிப்பில் மட்டுமின்றி வசூலிலும் தான் ஒரு சக்கரவர்த்தி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் ஜெயிலர் தான்.
உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளது.கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களின் டாப் 10 லிஸ்ட் படங்கள் வந்தது. இதில் நம்பர் 1 அரியணையில் ரஜினிகாந்த் தான் அமர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 80% சதவீதத்திற்கும் மேல் அனைத்து திரையரங்கங்களிலும் முதலிடத்தை ஜெயிலர் திரைப்படம் தான் பிடித்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரோகினி, காசி, உதயம், வெற்றி போன்ற பல திரையரங்கங்களில் முதலிடத்தை ஜெயிலர் தக்கவைத்துள்ளது.
இதன்மூலம் மீண்டும் நம்பர் 1 இடத்தை ரஜினிகாந்த் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்து வந்த விஜய் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.