உணவை சரியாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம் சாப்பிடும் உணவு கடவுள் நமக்கு தந்த ஆசீர்வாதம். எனவே, நாம் அதை எந்த வித அவசரமும் இல்லாமல் நிதானமாக சாப்பிட வேண்டும். மேலும் இப்படி சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உணவை சீக்கிரம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. மேலும் அவர்கள் காபி மற்றும் டீயைக் கூட வேகமாக தான் குடிப்பார்கள். ஏன் இன்னும் சொல்லபோனால், யாரோ விரட்டியடித்தது போல் மிக அவசரமாக சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவது நேரத்தை மிச்சப்படுத்துவதாக கருதப்படுகிறது.
ஆனால், இப்படி சாப்பிடுவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்பது தெரியவில்லை. உணவை சரியாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, வேகமாக சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

எடை அதிகரிப்பு: அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். வேகமாக சாப்பிடுவதால் சரியாக உணவை மெல்ல முடியாது. இப்படி மென்று சாப்பிடாமல் வயிற்றுக்குள் செல்லும் உணவு சரியாக ஜீரணமாகாது. அது வயிற்றில் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக, உடல் எடை
எளிதாக அதிகரிக்கும்.

நீரிழிவு நோய் வரும்: வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோல, எடை அதிகரிப்பால் டைப்-2 சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வேகமாக சாப்பிடுவதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்: வேகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால், இதயம் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கும். எனவே நீங்கள் உண்ணும் உணவை முடிந்தவரை நிதானமாக சாப்பிட முயற்சி செய்யுங்கள் மற்றும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

செரிமான அமைப்புக்கு தீங்கு: அவசர அவசரமாகச் சாப்பிடுவதால் உமிழ்நீருடன் உணவு சரியாகக் கலக்காது. இது வயிற்று வலி, வீக்கம், அஜீரணம், வாயு, புளிப்பு ஏப்பம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here